Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

முகாமிட்டுள்ள காட்டு யானைகள்…. வனத்துறையினரின் முயற்சி…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

காட்டு யானைகள் விவசாய நிலங்களில் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மரக்கட்டா வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் ஊருக்குள் நுழைந்து விட்டது. இந்த காட்டு யானைகள் அந்தேவனப்பள்ளி கிராமத்திற்கு அருகில் இருக்கும் விவசாய நிலங்களில் முகாமிட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பட்டாசுகள் வெடித்து யானைகளை விரட்ட முயற்சி செய்துள்ளனர்.

ஆனால் காட்டுயானைகள் தொடர்ந்து விவசாய நிலங்களுக்குள் முகாமிட்டுள்ளதால் வனத்துறையினர் அதனை கண்காணிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். எனவே பொதுமக்களும், விவசாயிகளும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |