தாய் தந்தைக்கு இடையே ஏற்பட்ட தகராறில் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள அண்ணா சாலை, புரா சாகிப் தெருவில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லோகேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் லோகேஷின் தாய் தந்தைக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த லோகேஷ் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லோகேஷின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.