Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ரூ1,00,000….. கேமரா திருட்டை காட்டி கொடுத்த மற்றொரு கேமரா……. திருடனுக்கு போலீஸ் வலைவீச்சு….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் திருமண மண்டபத்திலிருந்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள கேமராவை திருடி சென்றவனை சிசிடிவி காட்சிகளை கொண்டு காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடைபெற்ற திருமண விழா ஒன்றில் பதிவு செய்ய வந்த மாதேஷ் என்ற கேமரா மேன் அதிகாலை கேமராவுடன் கூடிய தனது தோல் பையை மண்டபத்திற்குள் வைத்துவிட்டு, தனது உதவியாளருடன் இயற்கை உபாதையை கழிக்க சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட மண்டபத்தில் இருந்த இளைஞன் ஒருவன் கேமரா வைத்திருந்த பையை திருடிச் சென்றுள்ளார். இதையடுத்து காவல்நிலையத்தில் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு கேமரா திருடனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இளைஞன் திருடி சென்ற கேமராவின் விலை ரூ1,00,000 என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |