Categories
உலக செய்திகள்

தோழியை நம்பி வீட்டில் அடைக்கலம் கொடுத்த பெண்.. குழந்தையால் தெரியவந்த அதிர்ச்சிகரமான உண்மை..!!

அரிசோனாவில் தோழியை நம்பி வீட்டில் தங்கவைத்த பெண்ணிற்கு கணவரின் சுயரூபம் தெரியவந்துள்ளது.

அரிசோனா நாட்டில் வசித்து வந்த 28 வயது இளம் பெண்ணான Hailey Custer-க்கு கணவரும், ஒரு மகனும் உள்ளனர். Hailey Custer, போதை பொருளுக்கு அடிமையாகி, அதிலிருந்து மீண்டு வந்தவர். அவரின் நெருங்கிய தோழியும் அவ்வாறு போதைப்பழக்கத்திலிருந்து மீண்டு வந்ததால் அவரை, Hailey தன் வீட்டில் தங்க வைத்திருக்கிறார்.

அந்த சமயத்தில் அவரின் தோழி கர்ப்பமடைந்திருக்கிறார். அவருக்கு யாரும் உதவி செய்யாததால், Hailey தன் தோழியை நன்றாக கவனித்து வந்திருக்கிறார். பிரசவத்திற்கு பின் தோழியின் குழந்தையை குளிக்க வைத்திருக்கிறார். அப்போது, குழந்தையின் கழுத்தில், தன் கணவர் மற்றும் மகனுக்கு இருக்கும் கட்டியை போன்று இருந்ததை பார்த்த, Hailey அதிர்ந்து போனார்.

எனவே இந்த குழந்தையின் தந்தை, தன் கணவர்தான் என்று உறுதி செய்தார். அப்போது அவரின் தோழி குற்ற உணர்ச்சியில் வெட்கி தலைகுனிந்தார். Hailey அதிர்ச்சி அடைந்தாலும், இதற்காக சண்டையிட்டால், அது குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், தன் தோழிக்கும் உதவ யாரும் இல்லை என்று எண்ணி அதனை அப்படியே விட்டிருக்கிறார்.

அதன்பின்பு தான் அவருக்கு அதிரவைக்கும் உண்மைகள் தெரியவந்திருக்கிறது. அதாவது, Hailey-யின் கணவருக்கு, மேலும் 30 பெண்களோடு தொடர்பு இருந்துள்ளது. இது குறித்து, Hailey இணையதளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அதில், என் தோழியை நான் மன்னித்ததால் எனக்கு நிம்மதி கிடைத்திருக்கிறது என்று கூறியிருக்கிறார். அவரை பலரும் பாராட்டியதோடு, அவரின் தோழியை விமர்சித்துள்ளனர். தற்போது, Hailey தன் கணவரை பிரிந்து வேறு ஒருவரை திருமணம் செய்து நிம்மதியாக வாழ்வதாக கூறியிருக்கிறார்.

Categories

Tech |