Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குற்றவாளிகளை குறிவைக்கும் சிசிடிவி: சென்னை காவல்துறையின் பலே ஐடியா.!!

உலகிலேயே பாதுகாப்பான நகரமாக சென்னையை மாற்ற பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டுமென காவல்துறை கூடுதல் ஆணையர் தினகரன் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

அம்பத்தூர் காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட அம்பத்தூர், நசரத்பேட்டை, குன்றத்தூர், ஆவடி, திருநின்றவூர் ஆகிய பகுதிகளில் 12 நவீன ஏ.என்.பி.ஆர் கண்காணிப்பு கேமராக்கள், ஆயிரத்து 629 (1,629) கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. அதனை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிகழ்ச்சி போரூரில் நடைபெற்றது. இதில், கூடுதல் கமிஷனர் தினகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கண்காணிப்பு கேமராக்களை தொடங்கி வைத்தார்.

பின்னர், நிகழ்ச்சியில் கூடுதல்ஆணையர் தினகரன் பேசுகையில், ”இந்த பகுதிகளில் வாகனங்களின் நம்பர் பிளேட்டை பதிவு செய்யும் கேமரா பொறுத்தி உள்ளோம், இதன் மூலம் குற்றச்சம்பவத்தில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிக்க முடியும், இந்த ஏ.என்.பி.ஆர் கேமராக்கள்பொறுத்தும் பணி பல்வேறு மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

முகப்பதிவை வைத்து குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் கேமராக்கள் கோயம்பேடு பஸ் நிலையத்தில் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மூன்று மாதத்தில் வேலைகள் முடிந்து தொடங்கப்படும்.

Categories

Tech |