கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் விக்ரம். இந்த படத்தில் விஜய் சேதுபதி, நரேன், பஹத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி நாராயணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த படம் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில் விக்ரம் படத்தில் வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதிக்கு ஆறு சகோதரர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி மற்றும் அவரது ஆறு சகோதரர்களை கமல்ஹாசன் எவ்வாறு சந்திக்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை என்று கூறப்படுகிறது. விரைவில் விஜய் சேதுபதியின் சகோதரர்களாக நடிக்கும் நடிகர்கள் குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.