Categories
அரசியல்

ஸ்டாலினின் சீரிய ஆட்சியால் தமிழக மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்…. கே.எஸ்.அழகிரி பாராட்டு….!!

மு.க.ஸ்டாலினின் 6 மாத கால ஆட்சி மிக அற்புதமாக இருப்பதாக கே.எஸ்.அழகிரி பாராட்டியுள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, 1955 ஆம் ஆண்டு பெரும் வெள்ளம் ஏற்பட்டது. அன்றைய முதல்வராக இருந்த காமராஜர் நேரடியாக பாதிப்படைந்த பகுதிகளில் களப்பணி ஆற்றினார். அதனை எதிர்க்கட்சி தலைவராக இருந்த அறிஞர் அண்ணா பாராட்டினார். இதனை எவராலும் மறக்க முடியாது. இதேபோல் தற்போது முதலமைச்சராக இருந்து வரும் மு.க. ஸ்டாலின் நேரடியாக களப்பணி ஆற்றி வருகிறார் என அவர் கூறியுள்ளார்.

மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாய விளைபொருட்களுக்கு அவர் நஷ்ட ஈடாக ஹெக்டேருக்கு 20 ஆயிரம் வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார். இது மிகவும் பாராட்டத்தக்கது என அவர் கூறியுள்ளார். அதோடு மட்டுமல்லாமல் குறுகியகால விதைகள் மற்றும் நுண்ணூட்ட உரங்களை விவசாயிகளுக்கு வழங்கி பேருதவி செய்துள்ளார் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தொடங்கப்பட்ட மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 37 லட்சம் பேர் பயனடைந்து உள்ளதாகவும் இது மிகவும் முன்னுதாரணமாக நடத்தப்படும் ஆட்சி எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் ஒரு வாரமாக பெய்த தொடர் கனமழையால் பாதிப்படைந்த மக்களுக்கு அம்மா உணவகத்தில் 14 லட்சம் பேருக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டு உள்ளது மிகவும் பாராட்டுக்குரிய ஒரு விஷயம் என அவர் கூறியுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலினின் சீரிய பணிகளை காங்கிரஸ் பாராட்டி வருவதாகவும் தொடர்ந்து தங்களது ஆதரவை தருவதாகவும் அவருடைய பணி தொடர வாழ்த்து தெரிவிப்பதாகவும் தலைவர் கே எஸ் அழகிரி கூறியுள்ளார்.

Categories

Tech |