யுவராஜ் தயாளன் இயக்கும் படத்தில் நயன்தாராவுக்கு பதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாராவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் எலி, தெனாலிராமன் போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்த யுவராஜ் தயாளன் இயக்கும் புதிய படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில் இந்த படத்திலிருந்து நயன்தாரா விலகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது . மேலும் அவருக்கு பதில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் விக்ரம் வேதா, நேர்கொண்டபார்வை, மாறா போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.