Categories
அரசியல் மாநில செய்திகள்

பார்த்தீங்களா..! நீர் எல்லாம் வடிஞ்சுருச்சு…. அதிமுக நடவடிக்கை தான்… கெத்து காட்டிய ஓபிஎஸ் …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம், தமிழகம் 1076 கிலோ மீட்டர் கடற்கரை பரப்பளவைக் கொண்ட நீண்ட கடல் பகுதியை பரப்பாகும். ஒவ்வொரு முறையும் இயற்கை இடர்பாடுகள் வருகின்றபோது தாழ்வு பகுதியாக, தாழ்வு மண்டலமாக புயலாக மாறி மீனவ பெருமக்களுக்கு சொல்ல முடியாத துன்பத்தையும், துயரத்தையும் ஒவ்வொரு முறையும் ஆண்டுக்காண்டு அவர்களால் தாங்க முடியாத அளவிற்கு இழப்பீடுகளை சந்திக்கின்ற ஒரு சூழல் ஏற்படுகிறது.

இந்த வருடமும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக சூறை காற்று பலமாக நம்முடைய பகுதியில் வீசியதன் காரணமாக நம்முடைய காசிமேடு பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் விசைப் படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி கிட்டத்தட்ட 34 படகுகள் முழுமையாக சேதம் அடைந்துள்ள சூழல் ஏற்படுகின்றது.

ஒவ்வொரு படகினுடைய மதிப்பு கிட்டத்தட்ட 45 லட்சம் 50 லட்சம் ரூபாய், அவர்கள் செய்த முதலீடு முழுவதையும் இன்றைக்கு இழந்து மிகப் பெரிய பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இதனால் மீனவ பெருமக்கள் பெரும் துன்பத்தையும் துயரத்தையும் அடைந்திருக்கிறார்கள்.

அரசு இந்தப் பிரச்சினையில் தனி கவனம் செலுத்தி அவர்களுக்கு உரிய முழு இழப்பீட்டையும் தர வேண்டும் என்பதுதான் அதிமுகவினுடைய வேண்டுகோளாக, தமிழக அரசுக்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும், இந்த பகுதியில் வாழ்கின்ற அனைத்து மீனவ சங்கங்களின் சார்பாக வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒவ்வொரு முறையும் அதிகமான கன மழை பெய்கின்ற போது சென்னை மாநகரமே தத்தளிக்கின்ற ஒரு சூழல் ஏற்படுகிறது. மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இருந்த காலத்திலும், அம்மாவினுடைய ஆட்சியிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, முன்பெல்லாம் தண்ணீர் தேங்கி இருந்தால் ஒரு வாரம் கூட அது கடக்க முடியாத ஒரு சூழல் அப்படி இருக்கின்ற நிலை இருந்தது, மாண்புமிகு அம்மாவினுடைய ஆட்சியிலும் எடுத்த பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக இன்றைக்கு நீரெல்லாம் வடிந்த சூழல் இருக்கிறது.

இருப்பினும் சில பகுதிகளில் தண்ணீர் தேங்கி இருக்கிறது, அரசு முனைப்புடன் செயலாற்றி அந்த பகுதியில் இருக்கின்ற நீரை எல்லாம் வெளியேற்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கை என தெரிவித்தார்.

Categories

Tech |