Categories
மாநில செய்திகள்

அண்ணா பதக்கம், கபீர் புரஸ்கார் விருது…. விண்ணப்பிக்க கடைசி தேதி….!!

தமிழகத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு முதல்வர் வீர,தீர செயலுக்கான அண்ணா பதக்கம் ஆண்டுதோறும் வழங்குவார். மேலும் இந்த பதக்க பெற்றவருக்கு ரூ.1,00,000 காசோலை வழங்கப்படும். அடுத்த ஆண்டு வழங்க உள்ள பதக்கத்திற்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் வீர,தீர செயல் புரிந்த தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். இந்தப் பதக்கம் பொதுமக்களின் 3 பேருக்கும் மற்றும் அரசு ஊழியர்களில் 3 பேருக்கும் வழங்கப்படும்.

இந்தப் பதக்கம் பெறுவதற்கு வயது வரம்பு கிடையாது. எனவே விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் மாவட்ட கலெக்டர் முலம் அல்லது http://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் முலம் அல்லது அரசு செயலர், பொது துறை, தலைமை செயலகம், சென்னை-9 என்ற முகவரிக்கு டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். அதனைத் தொடர்ந்து கபீர் புரஸ்கார் விருது சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்காக வழங்கப்படும்.

இந்த விருது கலவரம் அல்லது வன்முறையின் போது ஒரு ஜாதி, இனம் வகுப்பைச் சேர்ந்தவர்கள் பிற ஜாதி, இனம் வகுப்பை சேர்ந்தவர்களையோ அல்லது அவர் உடைமைகளையோ காப்பாற்றியவருக்கு வழங்கப்படுகிறது. இந்த விருது 3 நபர்களுக்கு வழங்கப்படும். அவர்களுக்கு முதல் பரிசு 20,000, 2 வது 10,000 மற்றும் 3வது 5,000 காசோலையாக வழங்கப்படும். இந்த இரண்டு விருதுகளுக்கும் வருகின்ற டிசம்பர் 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த இரண்டு விருதுகளும் குடியரசு தினவிழாவை முன்னிட்டு முதல்வர் வழங்குவார்.

Categories

Tech |