Categories
மாநில செய்திகள்

மாவட்ட பதிவாளர்கள் செயல்பாடில் அதிருப்தி…. பதிவுத்துறை வெளியிட்ட அறிக்கை….!!

தமிழகத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட சங்கங்கள் பதிவு துறை கண்காணிப்பில் உள்ளது. ஆனால் இந்த சங்கங்களில் பெரும்பாலானவை முறையான கணக்கு அறிக்கைகளை தாக்கல் செய்யவில்லை என்று புகார் வந்தது. இதையடுத்து ஒவ்வொரு பதிவும் மாவட்டத்திலும் உள்ள சங்கங்கள் கணக்கு அறிக்கைகளை தாக்கல் செய்து உள்ளனரா என்பதை மாவட்ட பதிவாளர் ஆய்வு செய்து வாரம் தோறும் அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

இதுகுறித்து பதிவுத்துறை தலைவர் சிவன் அருள் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கடந்த ஒரு மாதமாக பெறப்பட்ட வாராந்திர அறிக்கைகள் சரிபார்க்கப்பட்ட போது நிலுவையில் உள்ள கோப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில் மாவட்ட பதிவாளர்களின் பணி திருப்திகரமாக இல்லை.

அதனை தொடர்ந்து சங்கங்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைகளை விரைந்து ஆய்வு செய்து மாவட்ட பதிவாளர்கள் உடனே ஏற்பு வழங்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் மாவட்ட பதிவாளர்கள் பணியை டிஜிபி க்கள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும் நிவையில் உள்ள கோப்புகள் குறித்த விவரங்களை மாவட்ட பதிவாளர்கள் தொகுத்து தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளது.

Categories

Tech |