Categories
உலக செய்திகள்

“விமான விபத்து” 4 பேருக்கு நேர்ந்த விபரீதம்…. பிரபல நாட்டில் நடந்த சோகம்….!!

விமான விபத்தின்போது தன் தந்தை என்னை அணைத்துக்கொண்டு காயமின்றி காப்பாற்றி உள்ளார் என்று சிறுமி கூறியுள்ளார்.

அமெரிக்க மிச்சிகன் மாகாணத்திலுள்ள பீவர் தீவில் வசித்து வரும் ஒரு தம்பதியினர் தங்களின் செல்லப்பிராணிகளான 2 நாய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக விமானத்தில் கால்நடை மருத்துவமனைக்கு சென்றனர். அப்போது அந்த தம்பதியினருடன் மைக் பெர்டியூ மற்றும் அவரது மகள் லெனி பெர்டியூ இருவரும் விமானத்தில் பயணம் செய்தனர். இந்த விமானம் பீவர் தீவிலுள்ள வோல்கே நிலையத்தில் தரையிறங்கிய போது எதிர்பாராத விதமாக விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் தம்பதியினர், மைக் பெர்டியூ, விமானி ஆகிய நான்கு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் அந்த தம்பதியினரின் செல்லப்பிராணிகளாக 2 நாய்களும் இந்த விபத்தில் உயிரிழந்து விட்டது. அதே நேரத்தில் மைக் பெர்டியூவின் மகள் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பினார். அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவ்வாறு விமான விபத்துக்களான காரணம் குறித்து உடனடியாக தெரியவராத நிலையில் இது தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் சிகிச்சை பெற்று வரும் லேனி பெர்டியூ தற்போது நலமாக இருப்பதாகவும், எனினும் நன்கு குணமடைய இன்னும் சில காலம் தேவைப்படும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு விபத்து ஏற்பட்டபோது கடைசியாக தனது தந்தை என்னை அணைத்துக்கொண்டு காயம் அடையாமல் காப்பாற்றினார் என்று லேனி பெர்டியூ தெரிவித்ததாக அவரது தாய் கிறிஸ்டினா பெர்டியூ கூறியுள்ளார்.

Categories

Tech |