டெல்லியில் இதுவரை இல்லாத அளவிற்கு காற்றின் தரமானது மிகவும் மோசமடைந்துள்ளது. இதற்கு காரணம் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தேவையில்லாத பயிர்களை விவசாயிகள் தீயிட்டு கொளுத்துவதும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையினாலும் காற்றின் தரம் மோசம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் டெல்லியில் பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லியில் காற்று மாசு குறைப்பதில் அதிகாரத்துவம் முழுமையாக தோல்வி அடைந்துவிட்டது. வாகனங்களுக்கு தடை விதிப்பது, தண்ணீர் தெளிப்பது போன்றவற்றைத்தான் அரசு செய்து கொண்டிருக்கிறது. இயற்கை வந்து காப்பாற்றும் என அரசு நினைத்துக்கொண்டு இருக்கிறதா? என்று உச்ச நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.