தமிழகத்தில் 2022 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி நெய், வெள்ளம் உள்ளிட்ட 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதில் கரும்பு இடம்பெறவில்லை என்றும், உடனடியாக பொங்கல் தொகுப்பில் விடுபட்ட கரும்பை இணைக்க வேண்டும் என்றும் விவசாயிகள் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்க முதல்வர் ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
அதன்படி பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு, துணிப்பை ஆகிய 20 பொருட்களுடன் ஒரு முழுக் கரும்பு வழங்கப்படும்.தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் மக்கள் தொகைக்கு ஏற்ப டோக்கன் முறையில் பொங்கல் தொகுப்பு வழங்குவது குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.