கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாகப் பதவி வகித்தவர் சஞ்ஜிப் பானர்ஜி.இவர் கடந்த ஜன.4-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்ற நிலையில் இவரை இடமாற்றம் செய்யும் முடிவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி மூத்த வழக்கறிஞர்கள் கடிதம் எழுதியிருந்தனர். ஆனால் கொலிஜியம் தனது முடிவை திரும்பப் பெறாத நிலையில் மேகாலயா ஐகோர்ட்டிற்கு சஞ்ஜிப் பானர்ஜியை மாற்ற ஜனாதிபதி ராம்நாத் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதையடுத்து, மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பிரிவு உபசார விழாவைப் புறக்கணித்து, வீட்டைக் காலி செய்து கொல்கத்தா புறப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில், “நேரில் சொல்லாமல் விடைபெற்றதற்கு மன்னியுங்கள். நாட்டிலேயே சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள்தான் சிறப்பானவர்கள். என்னுடைய நடவடிக்கை உங்களைப் புண்படுத்தியிருந்தால் அது தனிப்பட்ட முறையிலானது அல்ல.
நீதிமன்றத்தின் நலனுக்கானது. என் மீதான உங்களின் அளவுகடந்த அன்பினால் பூரித்துப் போயிருக்கிறேன். ஆதிக்க கலாச்சாரத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கிறீர்கள். அதை முழுமையாக தகர்த்தெறிய இயலவில்லை. திறமையான நிர்வாகத்தை மேற்கொள்ள உதவியாக இருந்த பதிவுத்துறைக்கு நன்றி. சொந்த மாநிலம் என 11 மாதங்களாக சொல்லிக்கொண்டிருந்த மகிழ்ச்சியிலேயே விடைபெறுகிறேன்” என எழுதியுள்ளார்.