சிலிண்டர் என்பது மக்களுடைய அன்றாட தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் பெரிய சிலிண்டர் வாங்க முடியாதவர்கள், பேச்சுலர்கள், குடும்பத்தினருக்கு வகையில், மலிவான விலையில் ஸ்மார்ட் சிலிண்டர்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த சிலிண்டர்களுக்கு கம்போஸ்ட் சிலிண்டர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
நாம் ஏற்கெனவே பயன்படுத்திவரும் உருளை வடிவ இரும்பினாலான சிலிண்டரை விட இந்த சிலிண்டர்கள் ஸ்மார்ட்டாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதில் எவ்வளவு கேஸ் செலவாகி இருக்கிறது, மீதம் எவ்வளவு கேஸ் இருக்கிறது என்பதை முன்கூட்டியே நம்மால் தெரிந்து கொள்ள முடியும் என்பதால் அடுத்த சிலிண்டர் வாங்குவது பற்றி எளிதாக முடிவெடுக்க முடியும். கம்போசிட் சிலிண்டர்களில் 5 கிலோ, 10 கிலோ என கேஸ் அடைக்கப்பட்டு முறையே ரூ.502, ரூ.633.50 என்ற விலையில் விற்க்கப்படுகின்றது.இதற்கு டெபாசிட் தொகை செலுத்த வேண்டும். நாடு முழுவதும் முதற்கட்டமாக திருச்சி, திருவாரூர் உட்பட 28 நகரங்களில் விற்பனை தொடங்கியுள்ளது.