Categories
மாநில செய்திகள்

மக்களே…. இந்த வாரம் ஞாயிற்றுகிழமையும் சிலிண்டர் கிடைக்கும்…. சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள்  வருகின்ற ஞாயிற்றுகிழமையும் வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களை டெலிவரி செய்ய முடிவு செய்துள்ளன.  இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள், காஸ் ஏஜன்சி ஊழியர்கள் வாயிலாக, வீடுகளுக்கு சமையல் கேஸ் சிலிண்டர்களை டெலிவரி செய்து வருகின்றன. பெரும்பாலான ஊழியர்கள், ‘டிரை சைக்கிள்’ எனப்படும் 3 சக்கர சைக்கிளிலும், 2 சக்கர வாகனங்களிலும் சிலிண்டர்களை எடுத்து செல்கின்றனர்.

இந்நிலையில் பண்டிகை காலத்தை தவிர்த்த மற்ற ஞாயிற்றுக் கிழமைகளில் சிலிண்டர் டெலிவரி செய்ய படுவதில்லை. சென்னை மற்றும் அதை சுற்றிய மாவட்டங்களில் ஒரு வாரமாக பெய்த கனமழை காரணமாக பல சாலைகளில் குளம் போல தண்ணீர் தேங்கியதால் சிலிண்டர் டெலிவரி செல்வதில் சிரமம் ஏற்பட்டது. அதனால் சிலிண்டர்களை விரைந்து டெலிவரி செய்யுமாறு ஏஜன்சிகளை எண்ணெய் நிறுவனங்கள் அறிவுறுத்தின. பல இடங்களில் தண்ணீர் வடியாததால், சிலிண்டர் வினியோகத்தில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதனால் வருகின்ற ஞாயிற்று கிழமையும் வீடுகளுக்கு சிலிண்டர்கள் டெலிவரி செய்யப்பட உள்ளது.

Categories

Tech |