பேருந்தின் சக்கரத்தில் சிக்கி ஜவுளி வியாபாரி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள அரும்பாக்கம் பகுதியில் ஜவுளி வியாபாரியான முகமது அலி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் இருக்கின்றனர் இந்நிலையில் முகமது அலி தனது மோட்டார் சைக்கிளில் வடக்கு உஸ்மான் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்து விட்டார். அப்போது வடபழனி நோக்கி வேகமாக சென்ற மாநகர பேருந்து முகமது அலியின் மீது ஏறி இறங்கியதால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதுகுறித்து தகவலறிந்த போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முகமது அலியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.