Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தில் கிடந்த சடலம்…. விசாரணையில் தெரிந்த உண்மை…. ஈரோட்டில் சோகம்….!!

காதல் மனைவி பிரிந்து சென்ற வேதனையில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள மாவிலிபாளையம் பகுதியில் செல்லும் தண்டவாளத்தில் தலை துண்டித்த நிலையில் வாலிபர் ஒருவர் சடலமாக கிடப்பதாக ஈரோடு ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அந்த வாலிபர் சங்ககிரி வடுகபட்டியை சேர்ந்த மோகன்ராஜ் என்பதும், இவர் வெப்படையில் உள்ள தனியார் மில்லில் தொழிலாளியாக பணி புரிந்து வந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்தது.

மேலும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் “மோகன்ராஜ் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மகாலட்சுமி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 3 வயதில் ஒரு மகள் இருக்கின்றார். இதனையடுத்து மகாலட்சுமிக்கும், மோகன்ராஜூக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவர்கள் பிரிந்து சென்றனர். இவர்களுடைய விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில் மோகன்ராஜூக்கும், அவருடன் பணிபுரிந்த சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை சேர்ந்த சித்ரா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

அதன்பின் மோகன்ராஜூம், சித்ராவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்திற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின்படி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது சித்ரா தனது பெற்றோருடன் செல்வதாக கூறினார். இதன் காரணமாக காதல் மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் மோகன்ராஜ் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டது” காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனைதொடர்ந்து மோகன்ராஜின் சடலத்தை ரயில்வே காவல்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு பிரேத பரிசோதனை முடிந்து மோகன்ராஜின் உறவினர்களிடம் காவல்துறையினர் அவரது உடலை ஒப்படைக்க முயற்சி செய்தனர். அப்போது மோகன்ராஜ் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுத்தபிறகு உடலை பெற்றுக் கொள்வதாக அவரது உறவினர்கள் கூறியுள்ளனர். அப்போது காவல்துறையினர் பேச்சுவார்த்தை மேற்கொண்டு சுமார் அரைமணி நேர போராட்டத்திற்கு பிறகு உறவினர்கள் மோகன்ராஜின் உடலை வாங்கிச் சென்றனர்.

இதுதொடர்பாக ஈரோடு ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு மோகன்ராஜ் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அவர் எழுதி வைத்ததாக கூறப்படும் ஒரு கடிதம் காவல்துறையினரிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் குறிப்பிட்ட சிலர் தனது சாவுக்கு காரணமானவர்கள் என்றும் அவர்களது பெயர்களும் குறிப்பிட்டு உள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |