Categories
மாநில செய்திகள்

பள்ளிகளில் இனி சனிக்கிழமை வகுப்புகள் கிடையாது…? – அமைச்சர் அதிரடி…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளில் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இதனையடுத்து பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு தற்போது 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், “சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்துவது என்பது ஏற்கனவே நடைமுறையில் இருந்த ஒன்றுதான். பள்ளிகள் தற்போதுதான் திறக்கப்பட்டுள்ளதால் பாடங்களை முடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அடுத்த வருடம் எப்போதும் போல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் படிப்படியாக இது தளர்த்தப்படும். மேலும் ஆசிரியர்கள் பணியிடமாறுதலுக்கான விதிமுறைகள் வரும் வாரத்தில் இறுதி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |