Categories
மாநில செய்திகள்

பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு இனி…. ஒரே மாதிரியான கிரேடு முறை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகின்ற தன்னாட்சி பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளுக்கும் ஒரே மாதிரியான கிரேடு முறை அறிமுகம் செய்யப்பட இருப்பதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுவரை அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு ஒவ்வொரு செமஸ்டர் தேர்விலும், மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்களுக்கு ஏற்ப O, A, B, C, D, E என கிரேடுகள் வழங்கப்படும். ஆனால் தமிழகம் முழுவதும் 60 க்கும் அதிகமான தன்னாட்சி பொறியியல் கல்லூரிகளில் O, A, B ஆகிய கிரேடுகள் மட்டுமே வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன.

இதற்கு தீர்வு காணும் வகையில் அண்ணா பல்கலைக்கழகத்தை சேர்ந்த பொறியியல் கல்லூரிகளுக்கு ஒரே மாதிரியான கிரேடுகள் வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் இனி தன்னாட்சி பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை அண்ணா பல்கலைக்கழகம் கணக்கிட்டு அவர்களுக்கு கிரேடுகளை வழங்க உள்ளது.இந்த நடைமுறைகள் அனைத்தும் இந்த கல்வியாண்டு முதல் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |