Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பணி மாறுதலுக்கான விதிமுறைகளை முதல்வருடன் ஆலோசித்து கூடிய விரைவில் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அவ்வகையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், ஆசிரியர்கள் பணிமாறுதல் கலந்தாய்வு விதிமுறைகள் முதல்வருடன் ஆலோசித்து விரைவில் அறிவிக்கப்படும். சிறுபான்மையின பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதற்கான வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கு முடிவுக்கு வரும் போது நல்ல முடிவு வெளியிடப்படும். பள்ளிகள் நவம்பரில் திறக்கப்பட்டுள்ளது. அதனால் பாடம் நடத்துவதில் சிரமம் இருப்பதால் சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடைபெறும். கன மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைவில் நஷ்ட ஈடு வழங்கப்படும்.

மழையின் காரணமாக சேதமடைந்துள்ள பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளுமாறு அனைத்து ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கூடிய விரைவில் புதிய கட்டிடம் கட்டுவது குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழகம் முழுவதும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. இந்த வழிமுறைகள் வருகின்ற நவம்பர் 19ஆம் தேதி பெண் குழந்தை மீதான பாலியல் துன்புறுத்தல் தினத்தன்று கோவையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விழாவில் வெளியிடப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

Categories

Tech |