இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரைப் போன்றே ஆஸ்திரேலியாவில் பிக் பேஷ் லீக் டி20 தொடர் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இத்தொடரின் ஒன்பதாவது சீசன் இந்தாண்டு இறுதியிலிருந்து தொடங்கவுள்ள நிலையில், ஒவ்வொரு அணியும் தங்களது வீரர்களைத் தேர்ந்தெடுக்கும் முனைப்பில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.
அந்த வரிசையில் இன்று தென் ஆப்பிரிக்க அணியின் அதிரடி ஆட்டக்காரரான டேவிட் மில்லரை ஹொபர்ட் ஹரிகேன்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் டேவிட் மில்லர் முதல் முறையாக பிக் பேஷ் லீக் டி20 தொடரில் விளையாட ஒப்பந்தமாகியுள்ளார்.
இதற்கான அறிவிப்பை, ஹொபர்ட் ஹரிகேன்ஸ் அணி தனது அதிராகப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. மேலும், தென் ஆப்பிரிக்க அணியிலிருந்து டி வில்லியர்ஸ், டேல் ஸ்டெயின் ஆகியோரைத் தொடர்ந்து தற்போது டேவிட் மில்லரும் பிபிஎல்லில் களமிறங்கவுள்ளார்.சமீபத்தில் ஐபில் அணியான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிலிருந்து டேவிட் மில்லர் கழட்டிவிடப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
MILLER SIGNS!
South African batsman David Miller has signed with the Hurricanes for KFC @BBL|09!
Welcome to #TasmaniasTeam, David! pic.twitter.com/fmJYPdmKUX
— Hobart Hurricanes (@HurricanesBBL) November 20, 2019