Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அதிகரித்த கடன் தொல்லை…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் பகுதியில் சிவசுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சலவை தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு அதிக அளவு கடன் இருந்து வந்துள்ளது. இதனால் மனமுடைந்த சிவசுப்பிரமணியன் திடீரென விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.

இதனைப் பார்த்த அவரது உறவினர்கள் சிவசுப்பிரமணியனை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிவசுப்பிரமணியன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |