சிலிண்டர் வெடித்து குடிசை வீடு சேதம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆத்துவாம்பாடி கிராமத்தில் பச்சையம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சிலிண்டர் வெடித்து சிதறியுள்ளது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பச்சையம்மாள் உயிர் தப்பி விட்டார். ஆனால் அவரின் உறவினரான மணிமாறனுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் மணிமாறனை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து பொதுமக்கள் தீயணைப்பு துறை வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்துள்ளனர்.
இந்த தீ விபத்தில் பணம் மற்றும் நகை முற்றிலும் எரிந்து நாசமாயின. அதன் பிறகு தாசில்தாரான சண்முகம் மற்றும் மண்டல துணை தாசில்தார் சென்று பச்சையம்மாளுக்கு ஆறுதல் கூறிவிட்டு அவருக்கு அரசு நிவாரணமாக அரிசி, பருப்பு, உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வழங்கி உள்ளனர். மேலும் பச்சையம்மாளின் வங்கி கணக்கில் அரசின் நிவாரண நிதியாக 5 ஆயிரம் ரூபாய் பணம் வரவு வைத்துள்ளனர்.