வாலிபரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தச்சநல்லூர் பகுதியில் சப்பாணி என்பவர் வசித்து வருகிறார். இவர் நயினார்குளம் மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் தச்சநல்லூர் ஸ்ரீநகர் பகுதியில் வசிக்கும் நயினார் என்பவருக்கும் கோவில் கொடை விழாவில் கணக்கு ஒப்படைப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த நயினார் சப்பாணியை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் சப்பாணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சப்பாணி தச்சநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நயினாரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.