கோவிலில் அம்மன் நகையை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பரப்பாடி பகுதியில் முத்தாரம்மன் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலில் உள்ள கதவின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்து அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த வெள்ளி மாலையில் இருந்த 2 கிராம் எடையுள்ள தங்க பொட்டுகளை திருடிச் சென்றுள்ளனர்.
அதே சமயத்தில் அருகில் இருந்த பெருமாள் கோவிலில் மர்ம நபர்கள் நுழையாததால் சாமி கழுத்தில் அணிவிக்கப்பட்டு இருந்த நகைகள் தப்பின. இதுகுறித்து கோவில் தர்மகர்த்தா தங்கராஜ் வடக்கு விஜயநாராயணம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.