சட்டத்திற்கு புறம்பாக மதுவிற்பனை செய்பவர்கள் கட்டாயமாக தண்டிக்கப்படுவார்கள் என பீகார் மாநில முதல்வர் கூறியுள்ளார்.
பீகார் மாநிலத்தில் நேற்று மதுவிலக்குக் கொள்கை குறித்த மதிப்பீடு கூட்டத்திற்கு முன்னரே ‘ஜனதா தர்பார்’ என்ற நிகழ்ச்சியானது நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்கள் சந்திப்பில் நிதிஷ்குமார் பேசியதாவது “மதுவை அருந்தினால் மக்கள் இறந்து விடுவார்கள். இது ஒரு கேடு விளைவிக்கும் பொருள். இந்த விஷயம் மக்களுக்கு தெரிந்தும் கூட அவர்கள் ஏன் மது அருந்துகிறார்கள் என்பது எனக்கு புரியாத ஒன்றாக உள்ளது. மேலும் மாநிலத்தில் மதுவிலக்கு விவகாரத்தை சிலர் எனக்கு எதிராக திருப்பியுள்ளனர்.
குறிப்பாக மதுவிலக்கு அனைவரின் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டது என்பதை எல்லோரும் மறந்து மறந்துவிட்டார்கள். அதிலும் ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி என இருவரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை’ என்று கூறியுள்ளார். மேலும் மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து மக்களுக்கு புரியவைக்கும் முயற்சிகளானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அதிகார வரம்பிற்குட்பட்டு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
அதிலும் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனை செய்பவர்கள் கட்டாயமாக தண்டிக்கப்படுவார்கள்” என்று தெரிவித்துள்ளார். அதாவது, பீகாரில் கடந்த சில வாரங்களாக கள்ளச்சாராயம் குடித்து 40-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதனால் நிதிஷ்குமாரை எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சுமத்தி வருகின்றனர். குறிப்பாக கடந்த 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் எதிர்க்கட்சித் தலைவர்களின் ஒப்புதலுடன் பீகாரில் மதுவிலக்கு கொள்கையானது அமல்படுத்தப்பட்டது.