கடகம் ராசி அன்பர்களே..!
இன்று திட்டமிட்ட செயல் நிறைவேறி நன்மை காண்பீர்கள்.
தொழில் வியாபாரத்தில் இலக்குகள் நிறைவேறும். பணவருமானம் கிடைக்கும். உணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். மருத்துவ செலவுகள் ஏற்படக்கூடும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்தியோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். பிள்ளைகளின் நலனுக்காக பாடுபடுவீர்கள். விருந்தினரின் வருகை இருக்கும். திருமண காரியங்கள் சாதகமாக நடக்கும்.
வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்க கூடும். எதிலும் கவனமாக இருக்கப் பாருங்கள். அவசரப்பட வேண்டாம். மற்றவர்களின் விமர்சனத்திற்கு ஆளாக வேண்டாம். மனதை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்வதற்கு ஆலயம் சென்று வருவது உதவும். புதிய நபர்களின் மூலம் முன்னேற்றம் உண்டாகும். அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் ஏற்படும். உறவினர்களின் மூலம் முன்னேற்றம் உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே பிரச்சினை இல்லாமல் நல்லபடியாக செல்லும். காதல் கைகூடும். பிரச்சனை இல்லாமல் சுமுகமாக இருக்கும். மாணவர்களுக்கு எதிர்பார்த்த அளவில் முன்னேற்றம் உண்டாகும். கல்விக்காக எடுக்கும் முயற்சி வெற்றியில் முடியும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணியவேண்டும் வெளிர் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு காரியத்தை செய்து வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: வெளிர் நீலம் மற்றும் பழுப்பு நிறம்.