தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்களைத் தேடிச் சென்று ஆங்காங்கே தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது வரை 8 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அதில் மக்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் சென்று தடுப்பூசி செலுத்தி கொண்டனர். ஒவ்வொரு முகாமிலும் அரசு நிர்ணயித்த இலக்கை விட அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் 9வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் இன்று 50000 முகாம்களில் நடைபெற உள்ளது. சென்னையில் மட்டும் 2,000 முகாம்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தடுப்பூசிகள் போடப்படுகிறது. பொதுமக்களின் வசதிக்காக அவர்களின் வீடுகளுக்கு அருகிலேயே வாரத்தில் இரண்டு நாட்கள் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. எனவே பொதுமக்கள் தயக்கம் கொள்ளாமல் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.