Categories
உலக செய்திகள்

போதைப்பொருள் கடத்திய இந்தியர்…. கைது செய்த காவல்துறை அதிகாரிகள்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

சிங்கப்பூரில் கிளீனிங் சூப்பர்வைசராக பணிபுரியும் இந்திய வம்சாவளியை சேர்ந்த நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக தூக்கு தண்டனையை விதித்து உத்தரவிட்டுள்ளது.

சிங்கப்பூரில் கிளீனிங் சூப்பர்வைசராக இந்திய வம்சாவளியை சேர்ந்த முனுசாமி என்பவர் பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முனுசாமி கடந்த 2018ஆம் ஆண்டு போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக சிங்கப்பூர் காவல் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. இது தொடர்பாக இந்திய வம்சாவளியை சேர்ந்த முனுசாமி முன்னுக்கு பின்னாக நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இந்த வம்சாவளியைச் சேர்ந்த முனுசாமிக்கு போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக தூக்குத் தண்டனையை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |