நாட்டில் மத்திய, மாநில அரசுகளின் காவல்துறையில் பணியாற்றி வருகின்ற பணியாளர்கள், முப்படை வீரர்கள், ஊர்க்காவல் படை பணியாளர்கள் , சிறைச் சாலை பணியாளர்கள், தன்னார்வலர்கள், கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் பணியாற்றும் நகராட்சி அல்லது வருவாய்த்துறை ஊழியர்கள் ஆகியோர் ஏற்கனவே முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அவ்வகையில் கொரோனா காலத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி பணியாற்றி வருகின்ற மயான பணியாளர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையிலும், சிறப்பு சலுகைகள் கிடைக்கும் வகையிலும் அவர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி பணிபுரிந்து வரும் மயானப் பணியாளர்கள் உயிரிழக்க நேரிட்டால் அவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.