Categories
Uncategorized தேசிய செய்திகள்

மதுபோதையில் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைய முயன்ற ஜோடி… கைது செய்த போலீசார்….!!

மதுபோதையில் ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற காதல் ஜோடியை போலீசார் கைது செய்தனர்.

தலைநகர் புதுடெல்லியில் ராஜவீதி பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அமைந்துள்ளது ஜனாதிபதி மாளிகை. இது ஜனாதிபதி இல்லமாகவும்  மற்றும் அலுவலகமாகவும் செயல்பட்டு வருகிறது. இத்தனை பாதுகாப்புகளையும் மீறி கடந்த திங்கட்கிழமை இரவு 9.30  மணி அளவில் ஜனாதிபதி மாளிகைக்குள் மது போதையுடன் ஒரு ஜோடி நுழைந்துள்ளது.

இதனை கண்ட பாதுகாவலர்கள் அந்த ஜோடியை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த ஆண் மற்றும் பெண் இருவரும் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் இருவரும் காதல் ஜோடிகள் எனவும், அவர்கள் ஒரு சலூனில் வேலை செய்வதும் தெரியவந்துள்ளது. மேலும்  மதுபோதையில் அவர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள நுழைய முற்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Categories

Tech |