Categories
உலக செய்திகள்

“போலியான கொரோனா சான்றிதழ் விற்பனை!”.. ஜெர்மனியில் 12 நபர்கள் கைது..!!

ஜெர்மன் நாட்டில் போலியாக கொரோனா தடுப்பூசி சான்றிதழ்கள் தயார்செய்து விற்றதாக 12 பேரை காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்திருக்கிறார்கள்.

ஜெர்மனியில் போலியான தடுப்பூசி சான்றிதழ் 100 லிருந்து 400 யூரோக்கள் வரை விற்பனை செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. தடுப்பூசி பாஸ்போர்ட்கள் என்பது QR குறியீடு அல்லது அதிகாரபூர்வ தடுப்பூசி காகித கையேடாக இருக்கும். நாடு முழுவதும் இருக்கும் உணவகங்களிலும், பொழுதுபோக்கு இடங்களிலும், பார்களிலும் தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான ஆதாரம் அல்லது கொரோனாவிலிருந்து குணமடைந்ததற்கான ஆதாரம் காண்பிக்கப்பட வேண்டும்.

இந்நிலையில் காவல்துறையினரின் விசாரணையில், தடுப்பூசி தொடர்பில் போலியாக ஆவணங்கள் தயாரிக்கப்பட்டது தொடர்பில் 36 வயதுடைய ஒரு நபர் மற்றும் அதனை விற்பனை செய்ததாக 42 வயதுடைய இரண்டு நபர்கள் குறித்த தகவல் கிடைத்திருக்கிறது. இதற்காக சுமார் 200 அதிகாரிகள், சோதனை மேற்கொண்டு வந்துள்ளனர்.

மேலும், 10 நபர்கள் அதிகாரிகளின் சோதனையில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். குறைந்தபட்சம் 300 நபர்களுக்கு பொய்யான கொரோனா சான்றிதழ் விற்பனை செய்யப்பட்டிருக்கும் என்று நம்பப்படுகிறது. கைது செய்யப்பட்ட நபர்களின் மொபைல் எண்கள்  மற்றும் தகவல்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். மேலும் போலியான தடுப்பூசி சான்றிதழ்களை வாங்கிய 20 நபர்களையும் புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

Categories

Tech |