Categories
சினிமா தமிழ் சினிமா

ஜி.வி.பிரகாஷின் ‘பேச்சுலர்’… சென்சார் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு…!!!

ஜி.வி.பிரகாஷின் பேச்சுலர் படத்தின் சென்சார் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் கலக்கி வருபவர் ஜி.வி.பிரகாஷ். தற்போது இவர் செல்பி, ஐங்கரன், அடங்காதே, 4ஜி போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயில், பேச்சுலர், இடிமுழக்கம் போன்ற படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதில் பேச்சுலர் படத்தை சதீஷ் செல்வகுமார் இயக்கியுள்ளார். இந்த படத்தில் திவ்யபாரதி கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் பகவத் பெருமாள், முனிஸ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆக்சஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். இந்நிலையில் பேச்சுலர் படத்தின் சென்சார் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. வருகிற டிசம்பர் 3-ஆம் தேதி இந்த படம் தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |