Categories
மாநில செய்திகள்

BREAKING: 16 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்…. மக்களே அலெர்ட்டா இருங்க… கடும் எச்சரிக்கை….!!!

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது. வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா அருகே நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில்காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கு திசையில் 330 கிலோமீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலைகொண்டுள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் வருகின்ற சனிக்கிழமை வரை கன மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மிக அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மற்றும் திருப்பத்தூர், சேலம்  உள்ளிட்ட 16 மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |