Categories
சினிமா தமிழ் சினிமா

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்கும் சிவகார்த்திகேயன்….? வெளியான புதிய தகவல்….!!!

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயன் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக வலம் வருகிறார். நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”டாக்டர்”. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் வசூல் ரீதியாகவும் வெற்றி அடைந்தது. இதனையடுத்து, இவர் ‘டான்’ மற்றும் ‘அயலான்’ போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயன் ஒப்பந்தம்? | sun pictures and  sivakarthikeyan in deal for 5 movies - hindutamil.in

இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் இயக்குனர் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. விரைவில் இதுகுறித்த அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, சிவகார்த்திகேயன் நடித்த ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |