கடும் நிதி நெருக்கடியால் அவசியமான பொருட்களைக் கூட இறக்குமதி செய்ய முடியாத சூழல் உருவாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் ஆப்கானிஸ்தான் சொத்துகளை அமெரிக்க அரசு விடுவிக்க வேண்டும் என்று தலீபான்களின் வெளியுறவுத்துறை அமைச்சரான அமீர்கான் முட்டாக்கி தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக அமெரிக்க அரசுக்கு கடிதம் ஒன்றை அவர் எழுதியுள்ளார். அதில் ” ஆப்கானிஸ்தானில் தற்பொழுது தலீபான்களின் ஆட்சி நடைபெறுகிறது.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள மத்திய வங்கிக்கு சொந்தமான சுமார் 70,00,00,000 சொத்துகளை அமெரிக்கா முடக்கியுள்ளது. குறிப்பாக ஆப்கானிஸ்தான் கருவூலத்தில் நிதியில்லாததால் அவசியமான பொருட்களை கூட இறக்குமதி செய்ய முடியவில்லை. மேலும் பல மாதங்களாக அரசு அதிகாரிகளுக்கு சம்பளம் கொடுக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த அவல நிலையானது இப்படியே நீடித்தால் மக்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேறிவிடுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.