தமிழக கடலோர மாவட்ட மீனவ பிரதிநிதிகளுடன் மீன்வளத் துறை ஆணையர் அலுவலகத்தில் கால்நடை பராமரிப்பு துறை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் கலந்துரையாடினார். அதன்பின் செய்தவர்கள் சந்தித்து பேசிய அவர், மீனவ மாணவர்களுக்கு அங்குள்ள பகுதிகளில் பள்ளிகள் அமைத்து கொடுப்பது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் முடிவெடுப்பார்.
பருவமழையால் தமிழக கடலோர பகுதிகளில் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், கால்நடை பராமரிப்பு துறையில் காலியாக உள்ள இடங்கள் நிரப்பப்படுமா? என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுபியதற்கு பதிலளித்த அவர், 1,150 காலியிடங்கள் ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி மூலமாக தேர்வாகியுள்ளனர். அதனை எதிர்த்து வழக்கு போடப்பட்ட நிலையில் வழக்கு முடிந்த பின்பு கால்நடை பராமரிப்பு துறையில் உள்ள காலியாக உள்ள இடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவித்துள்ளார்.