நாளை நடைபெற இருந்த தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மறுநாள்( நவம்பர் 20) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து நாளை நடைபெற இருந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் மழை நிவாரணம், டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து அமைச்சர் பெரியசாமி தலைமையிலான குழு சமர்ப்பித்த அறிக்கை உள்ளிட்டவை குறித்து பேச உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும், மழை காரணமாக மாவட்டங்களில் அமைச்சர்கள் நிவாரண பணிகளில் ஈடுபட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாலும் நாளை நடைபெற இருந்த அமைச்சரவைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.