ஆர்யா- சௌந்தர்ராஜன் இணையும் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ஆர்யா நடிப்பில் கடைசியாக வெளியான சார்பட்டா பரம்பரை, எனிமி போன்ற படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து ஆர்யா இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான ‘டெடி’ படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்நிலையில் ஆர்யா, சக்தி சௌந்தர்ராஜன் இணையும் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
Once again teaming up with My Favourite Person, Director nd brother @ShaktiRajan for #Captain @immancomposer sir Magic 😍😍 with @madhankarky brother @ThinkStudiosInd @SimranbaggaOffc @AishuLekshmi @IAmKavyaShetty @DopYuva @moorthy_artdir @PradeepERagav pic.twitter.com/JZebLwebJo
— Arya (@arya_offl) November 18, 2021
அதன்படி இந்த படத்திற்கு ‘கேப்டன்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி, சிம்ரன், காவ்யா ஷெட்டி உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர். யுவா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். விரைவில் இந்த படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.