நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 18ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. மூன்றாம் நாளான இன்று பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதங்கள் நடைபெற்றன.
இதில் திமுக உறுப்பினர் டி.ஆர் பாலு பேசுகையில், மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை. தேசிய அளவில் மருத்துவப் படிப்புக்கான இடங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்