Categories
கிரிக்கெட் விளையாட்டு

”ஆண்கள் அழுவதால் என்ன குறையுள்ளது?” – சச்சினின் உணர்ச்சிவசமான கடிதம்…!!

சர்வதேச ஆண்கள் தினத்தன்று கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்படும் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், ஆண்களின் அழுகை பற்றி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

நேற்று முன் தினம் சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்பட்ட வேளையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கர், தனது வாழ்நாளில் முதல் முறையாக வெளிப்படையான கடிதம் ஒன்றை எழுத்தியுள்ளார். அவர் அக்கடிதத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். அவரின் அந்த கடிதமானது ஆண்கள் ஏன் அழக்கூடாது என்பது தான்.

சச்சின் எழுதிய கடிதத்தில், ஆண்கள் அழக்கூடாது என எழுதப்படாத விதி இச்சமூகத்தில் உண்டு. கண்ணீர் சிந்தும் ஆண்கள் பலவீனமானவர்கள் என்ற நம்பிக்கையில் இச்சமூகம் நம்மை வளர்த்துள்ளது. இதே நம்பிக்கையில் தான் நானும் வளர்ந்தேன். இது தவறானது என்பதை உணர்ந்ததால்தான் நான் இக்கடிதத்தை எழுதுகிறேன். உங்களது வலியை வெளியில் காண்பிக்க அதிகமான துணிச்சல் தேவை. ஆண்கள் இதை செய்யலாம்; இதை செய்யக் கூடாது என்பது போன்ற பழமையான கருத்துகளுக்கு விடை கொடுங்கள் என அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், சில நேரங்களில் நீங்கள் தோல்வியை சந்திக்கலாம். அப்போது கதறி அழத்தோன்றும். ஆனால் கண்ணீரை கட்டுப்படுத்தி, கடினமானவர் போல நடிப்பீர்கள். ஏனெனில் ஆண்கள் இப்படி தான் நடந்து கொள்ள வேண்டுமென இச்சமூகம் எதிர்பார்க்கின்றது. உண்மையில் ஆண்கள் அழுவதால் எவ்வித அவமானமும் நேரப்போவதில்லை. உங்களை பலமானவராக காட்டும் ஒரு உணர்வை ஏன் நீங்கள் மறைக்கிறீர்கள்? என இளைஞர்களுக்கு சச்சின் கேள்வி எழுப்பியுள்ளார்.

says it's okay for men to cry

மேலும், எனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி நாளில் உணர்ச்சி வெள்ளம் பொங்கியது. கடைசி முறையாக பெவிலியன் திரும்ப வேண்டிய தருணம் குறித்து பல முறை சிந்தித்திருக்கிறேன். ஆனால் அந்த தருணத்திற்கு ஏற்ப என்னால் தயாராக முடியவில்லை. ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் எனது மனதில் ஒரு விதமான தயக்கம் இருந்தது. எல்லாம் முடிந்தது போன்ற அச்சம் ஏற்பட்டது. என் மனதில் நிறைய எண்ணங்கள் ஓடின. ஆனால் என்னால் அதை கட்டுப்படுத்த முடியவில்லை. உலகிற்கு முன் அழுது எனது வலியை நான் வெளிப்படுத்தினேன். அப்போது ஒருவித நிம்மதி எனக்கு கிடைத்தது போல மிகவும் துணிச்சலான ஆண்மகனாக என்னை நான் உணர்ந்தேன் என சச்சின் அக்கடிதத்தில் எழுதியுள்ளார்.

இக்கடித்ததின் மூலம் ஆண்கள் அழுகை என்பது துணிச்சலின் வெளிப்பாடு என்பதை இளைஞர்களுக்கும், ஆண்களுக்கும் சச்சின் டெண்டுல்கர் தனது உணர்ச்சியின் மூலம் விளக்கியுள்ளார். தற்போது சச்சினின் இந்த கடிதமானது இணையத்தில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

Categories

Tech |