பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள தேள் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முக தன்மை கொண்ட கலைஞராக வலம் வருபவர் பிரபுதேவா. இவர் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள பொன் மாணிக்கவேல் படம் நவம்பர் 19-ஆம் தேதி (நாளை) டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ரிலீஸாக உள்ளது. மேலும் இவர் நடிப்பில் உருவாகியுள்ள ஊமை விழிகள், தேள், பஹீரா, யங் மங் சங் போன்ற படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.
#Theal Releasing in Theatres from 10th December. I am excited🔥🏆👍
A @CSathyaOfficial Musical @SamyukthaHegde #HariKumar @iYogiBabu @Cinemainmygenes @Viveka_Lyrics @UmadeviOfficial #Krithiya #Lavaradhan @StudioGreen2 @kegvraja @thinkmusicindia @DoneChannel1 pic.twitter.com/QVn67WnkGG
— Prabhudheva (@PDdancing) November 18, 2021
இதில் ஹரிகுமார் இயக்கியுள்ள தேள் படத்தில் சம்யுக்தா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரபு தேவாவுக்கு அம்மாவாக ஈஸ்வரி ராவ் நடித்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சத்யா.சி இசையமைத்துள்ளார். கடந்த வருடம் இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா காரணமாக ரிலீஸ் தள்ளிப்போனது. இந்நிலையில் தேள் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற டிசம்பர் 10-ஆம் தேதி உலகம் முழுவதும் தியேட்டர்களில் இந்த படம் ரிலீசாக உள்ளது.