கடலூர் மாவட்டத்தில் பள்ளி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியில் நேற்றுவரை பயன்பாட்டில் இருந்த பள்ளி கட்டிடம் இன்று காலைதிடீரென இடிந்து விழுந்துள்ளது. கனமழை காரணமாக விடுமுறை என்பதால் அங்கு அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்டிடம் பழுதடைந்து இருந்த காரணத்தினால் இடிந்து விழுந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.