ஆஸ்திரேலிய நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தியதால் பக்க விளைவுகள் ஏற்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் அரசிடம் இழப்பீடு கேட்டிருக்கிறார்கள்.
ஆஸ்திரேலியாவில் தடுப்பூசி குறித்த பிரச்சனைகளுக்காக 50 மில்லியன் டாலர் நிதி அளிக்க வேண்டிய காட்டாயத்தில் அரசு இருக்கிறது. நாட்டில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி செலுத்திய 10,000-த்திற்கும் அதிகமான மக்கள், அரசிடம் இழப்பீடு கேட்டிருக்கிறார்கள்.
அதாவது, தடுப்பூசி செலுத்திக்கொண்டதால் பக்க விளைவுகள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அதனால் வருமானத்தை இழந்ததாகவும் தெரிவித்துள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5000 ஆஸ்திரேலிய டாலர் இழப்பீடு வழங்கப்பட்டால், அரசிற்கு 50 மில்லியன் டாலர் செலவு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பைசர் தடுப்பூசி செலுத்திக் கொண்டதால், 288 நபர்களுக்கு சில பாதிப்புகள் கண்டறியப்பட்டிருக்கிறது.