தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் பணியாற்றிய ஊழியர்களுக்கு கவுரவ ஊதியம் வழங்கபடுவதற்கான அரசாணை தமிழக அரசசு வெளியிட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பணியாற்றிய ஊழியர்களின் கடின உழைப்பை கவுரவிக்கும் வகையில் கவுரவ ஊதியம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதற்காக ரூ.159 கோடியை ஒதுக்கி தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி தேர்தல் பணிகள் மேற்கொண்ட மாவட்ட தேர்தல் அதிகாரிகள், மாநகராட்சி ஆணையர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆகியோருக்கு தலா ரூ.33,000 கவுரவ ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வட்ட வருவாய் அலுவலர்கள், தாசில்தார்கள், நகராட்சி ஆணையர்களுக்கு தலா ரூ.24,500 கவுரவ ஊதியமும், மண்டல அலுவலர்கள், தேர்தல் பார்வையாளர்கள், வீடியோ ஒளிப்பதிவாளர்கள் உள்ளிட்ட தேர்தல் பணியாற்றிய அனைவருக்கும் கவுரவ ஊதியம் வழங்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.