மாநாடு படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் சிம்பு கண்கலங்கியபடி பேசியுள்ளார்.
சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் நடிப்பில் ”மாநாடு” திரைப்படம் உருவாகியுள்ளது. சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இதனையடுத்து, இந்த படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சிம்பு, ”நிறைய பிரச்சனைகள் இருக்கு. பிரச்சனைகளை நான் பார்த்துக் கொள்கிறேன். என்னை மட்டும் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்” என கண்கலங்கியபடி பேசியுள்ளார்.