Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆட்சி மாறினாலும் காட்சி மாறல… “வேட்டிய மடிச்சு கட்டுநா மட்டும் வெள்ளம் போயிடுமா”..? முதல்வரை விமர்சித்த நித்தி…!!!

நித்யானந்தா வெள்ள பாதிப்பு குறித்து ஆட்சியாளர்களை விமர்சித்து பேசி வருகிறார். தமிழ்நாடு முழுவதும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ள நீர் குடியிருப்புக்குள் புகுந்து மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் நவம்பர் 7 ஆம் தேதி முதல் கனமழை பாதிப்புகளை நேரடியாக சென்று ஆய்வு செய்து வருகிறார். முதல்வரின் நடவடிக்கைகள் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் நித்யானந்தா முதல்வரை விமர்சித்து வீடியோவில் பேசியுள்ளார். அதில் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பது போல் விமர்சித்துள்ளார்.

அந்த வீடியோவில் அவர் பேசி இருப்பதாவது: “முகநூலில் மீன்ஸ் ஒன்றை பார்த்தேன். அதில் சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு முதல்வராக இருந்தவர் வேட்டியை மடித்துக் கொண்டு சென்னை வெள்ளத்தை பார்வையிடுவது போன்றும், அதற்குப் பிறகு முதல்வரானவரும் வேட்டியை மடித்துக்கொண்டு வெள்ளத்தை பார்வையிடுவது போல இருந்தது. இந்த மாதிரி வேற வேற முதல்வர்கள் வேட்டியை மடித்துக்கொண்டு சென்னை வெள்ளத்தை பார்வை இடுகின்ற போட்டோக்கள் வலம் வருகிறது.

எத்தனை முதல்வர்கள் வந்து போனாலும் சென்னை வெள்ளம் தொடர்பான பிரச்சனை முடியவில்லை. அதாவது அடிப்படையான பிரச்சனைக்கு தீர்வு காணப்படவில்லை. “தண்ணியோட வீட்டில் நாம் வீடு கட்டியதால், இப்போது நம்ம வீட்டில் தண்ணீர் வீடு கட்டி உள்ளது”. என்று தனக்கே உரிய பாணியில் பேசியுள்ளார். மழை வெள்ளத்தை பெரிய பெரிய ஆளுங்க வந்து பார்வையிட்ட உடனே. நம்முடைய கவனம் திசை மாறுகிறது. இதுவும் ஒரு பிரச்சினை. இந்த மீம்ஸ பார்க்கும்போது இத்தனை ஆண்டுகாலமாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லையா அல்லது பிரச்சனை முற்றி போய் விட்டதா என்பது தெரிகிறது.

மழை அடிக்கிற மாதிரி அடிக்கும். நம்ம அழுகிற மாதிரி அழணும், நிவாரண உதவி நடக்கிற மாதிரி நடக்கும். அடுத்த வருஷமும் இதுதான் நடக்கும். அவ்வளவுதான்…  எங்கோ இயற்கையோடு நமக்கு இருக்கும் தொடர்பை இழந்துவிட்டோம். அதுதான் பிரச்சினை” என அவர் அதில் பேசியுள்ளார்.

Categories

Tech |