Categories
உலக செய்திகள்

“பூட்டானின் எல்லைப்பகுதியை ஆக்கிரமித்த சீனா!”.. செயற்கைக்கோள் புகைப்படங்களில் வெளிவந்த தகவல்..!!

சீன அரசு, பூட்டான் நாட்டிற்குரிய எல்லைப்பகுதியை ஆக்கிரமித்து புதிதாக 4 கிராமங்களை அமைத்துள்ளதாக செயற்கைக்கோள் புகைப்படங்களினால் தெரியவந்திருக்கிறது.

The little lab-ல் ஆராய்ச்சியாளராக இருக்கும் நிபுணர், செயற்கைக்கோள் புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். அதில் கடந்த 2020 ஆம் வருடம் மே மாதம் தொடங்கி தற்போது வரை சுமார் 100 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட புதிய கிராமங்களை சீனா உருவாக்கியிருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மேலும் சீனா, ஆக்கிரமித்துள்ள பகுதிகள் கடந்த 2017 ஆம் வருடத்தில் இந்தியா மற்றும் சீன படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்ட Doklam என்ற பகுதிக்கு அருகில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பூட்டான் நாட்டின் வெளியுறவு கொள்கைகள் தொடர்பில் இந்தியா ஆலோசனைகள் அளித்துவருவதோடு, அந்நாட்டு படையினருக்கு இந்தியா பயிற்சி அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |